திண்டுக்கல் மாவட்டம் அருகே உணவகத்தில் ஆம்லெட் கேட்டு போதை ஆசாமிகள் கடை உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலைய வளாகத்தில் உணவகம் நடத்தி வருபவர் சுப்பிரமணி. நேற்று வழக்கம் போல் உணவகத்தில் இருந்தபோது, குடிபோதையில் வந்த மூன்று நபர்கள் குடிபோதையில் அநாகரிகமாக பேசிக்கொண்டே உணவு அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது, ஆம்லேட் கேட்டால் தரமுடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடை உரிமையாளர் ஆம்லேட் ஆர்டர் சொல்ல வில்லையே, என கேட்டுள்ளார். குடிபோதையில் இருந்த மூன்று பேரும் கடையில் இருந்த பொருட்களை வீசி எரிந்தும், சுப்ரமணியை அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையால் தாக்கியும், சுப்ரமணியின் மகன் தினேஷையும் தாக்கியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த சுப்ரமணியின் மனைவி லட்சுமி, மகன் தினேஷை காப்பாற்ற போராடும் காட்சிகளும் அருகில் இருந்த பழக்கடையில் பொருந்தபட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதில் தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அடிதடியில் ஈடுபட்ட அசோக் ,நவீன் ,சீனிவாசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனியில் உணவகத்தில் ஆம்லேட் கேட்டு அடிதடியில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஒரு கோடி அப்பு... கமிஷனுக்கு ஆசை பட்டு பணத்தை இழந்த நபர்!