நடிகை கெளதமி விவகாரம் தன்னிடம் வந்திருந்தால் மறைமுகமாக உதவி செய்திருப்பேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சோியில் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடந்த செப்டம்பா் மாதம் 30-ம் தேதிக்கு பின்னா் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு அங்கீகாரம் செல்லாது என தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்திருப்பது குறித்து சட்டரீதியாக எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தொிவித்துள்ளாா்.
மேலும் நடிகை கெளதமி குறித்து பேசிய அவர், "கெளதமியின் சொத்து பரிபோவதை பாதுகாத்து இருக்க வேண்டும், அரசியலில் வரும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும், அரசியலில் கிடைத்த வாய்ப்பை இழக்கும் அளவிற்கு சூழ்நிலை இருந்திருக்கக்கூடாது என்பது எனது கருத்து" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகை கவுதமியின் விவகாரம் தன்னிடம் வந்திருந்தால் நேரடியாக உதவ முடியாவிட்டாலும், மறைமுகமாக உதவி செய்திருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.