அதிக பாரம் ஏற்றி வந்த லாரி... லஞ்சம் கேட்ட காவல் உதவி ஆய்வாளர்!

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி... லஞ்சம் கேட்ட காவல் உதவி ஆய்வாளர்!

Published on

தென்காசி-கேரளா எல்லை பகுதியில், அதிக பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்றை, சொத்தை செய்த பின்னர் லஞ்சம் கேட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், தமிழக- கேரளா எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடி வழியாக, நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், சரக்குகளை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு சென்று வரும் சூழலில், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளை புளியரை காவல் சோதனை சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், தமிழகத்திலிருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அப்பொழுது, புளியரை சோதனை சாவடியில் அந்த லாரியை மறித்த காவலர்கள் அதிக பாரம் இருப்பதாக கூறி நிறுத்தி வைத்துள்ளனர்.

அதன் பின்னர், ஓட்டுனரிடம் லாரியை அனுமதிக்க வேண்டுமென்றால் பணம் கொடு என்று கேட்டதாக கூறப்படுகிறது. உடனே, அந்த லாரி டிரைவர் புளியரை காவல் நிலைய சோதனை சாவடியில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளரிடம் லஞ்சம் கொடுத்துள்ளார். லஞ்சம் கொடுத்த பின்னர், லாரி டிரைவர், காவல் ஆய்வாளரிடம் எதோ கேட்க, காவல் நிலையத்திற்கு போனில் தொடர்புகொண்டு  லாரியின் எண்ணை கூறி, வழக்கு பதிவு செய்வது போல் மிரட்டியுள்ளார்.

இதனை அருகே இருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ காவல்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த நிலையில், அந்த வீடியோவை வைத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் விசாரணை நடத்தி வந்த நிலையில், லாரி ஓட்டுனர்களிடம் உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் ஜேம்ஸ்யை பணி இடை நீக்கம் செய்த காவல் கண்காணிப்பாளர், அவருக்கு உதவியாக இருந்த மற்ற இரண்டு காவலர்களான மகாராஜன், காளிராஜ் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com