பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கத்தியால் தாக்க முயன்ற நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். கரே டூ நார்ட் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும், அப்போது அவர் கத்தியை எடுத்து தாக்கியதால் பாதுகாப்பு கருதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் ஜீன் பாப்டைஸ்ட் தெரிவித்துள்ளார்.
இதில் சில காவலர்கள் காயமடைந்திருப்பதாகவும் ஆனால், இது பயங்கரவாதம் தொடர்பான சம்பவம் அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.