பேருந்து ஓட்டுனர் மது போதையில் இருந்ததால் கட்டுப்பாடு இழந்து தாறுமாறாக ஓடி காரில் இடித்ததையடுத்து பொது மக்கள் கேள்வி எழிப்பியதால் பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து எம்கேபி நகருக்கு செல்லக்கூடிய 46G என்ற பேருந்து இன்று காலை அண்ணா நகர் சாந்தி காலணி சந்திப்பில் முன்னாள் சென்ற காரின் மீது மோதியதை தொடர்ந்து பேருந்து தாரு மாறாக சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காரை ஓட்டி சென்ற பெண் பேருந்தை மறித்து கட்டுப்பாடு இல்லாமல் பேருந்தை ஓட்டி செல்வது குறித்து பேருந்து ஓட்டுநரின் கேள்வி எழுப்பிய நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அப்பெண் காவல் நிலைத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையில் அப்படியே விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் காவல் நிலைய போக்குவரத்து போலீசார் பேருந்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் விசாரணை மேற்கொண்டதில் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரின் பெயர் தேவராஜ் என்பதும், அவர் மது போதையில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நடைபெற்ற சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:"லிஸ்ட் ரெடி அறிவிப்பு எப்போது?? - தொண்டர்கள் வெயிட்டிங்...”