லஞ்சம் கொடுக்காமல், தட்டி கேட்ட ஓட்டுனர்... ஆத்திரத்தில் தாக்கிய வனத்துறை ஊழியர்!!

லஞ்சம் கொடுக்காமல், தட்டி கேட்ட ஓட்டுனர்... ஆத்திரத்தில் தாக்கிய வனத்துறை ஊழியர்!!
Published on
Updated on
1 min read

ஈரோடு சத்தியமங்கலத்தில் 30 ரூபாய் லட்சம் கேட்ட வனத்துறை ஊழியரை, தட்டி கேட்ட லாரி ஓட்டுநர் தாக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை திண்டுக்கல் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் இணைக்கும் முக்கிய பாதையாக விளங்குகிறது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு வாகனங்கள் செல்வதும் வருவதும் வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்றுள்ளது. அதனை ஒட்டி வந்த ஓட்டுனரிடம், வனத்துறை ஊழியர் மூர்த்தி என்பவர் 30 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதில், ஓட்டுனர் தட்டி கேட்கவே, ஆத்திரமடைந்த வனத்துறை ஊழியர், அவரைத் தாக்கியுள்ளார். இதனை அறிந்த சக வாகன ஓட்டிகள் வனத்துறை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரி தீபக்குமார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும், பொழுது திடீரென ஏற்கனவே தாக்கப்பட்ட வாகன ஓட்டி அழைத்து தாக்கியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியா நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திம்பம் மலைப்பாதை வழியாக தற்போது இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து தடை  செய்யப்பட்டுள்ளதால் சட்டவிரோதமாக வாகனங்களை அனுமதிக்க பண்ணாரி சோதனைச் சாவடியில் உள்ள வனத்துறையினர் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு இரவு நேரங்களில் வாகனம் அனுமதிக்கப்படுகிறது என ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ அதை உண்மைப்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com