கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார். தொலைபேசி உரையாடல் பதிவு மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஓப்பன் ஆகாத 26 சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக வழங்க வேண்டும் என்று அரசு தரப்பிற்கு நீதிபதி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்த நிலையில், மனுதாரர் தாக்கல் செய்த மனு மீது கூடுதல் ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணை நேரம் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஸ்ரீமதியின் தாயார் செல்வி தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. மேலும் பள்ளி தாளாளர் சாந்தி, ரவி, சிவச்சந்திரன் மற்றும் எதிர் தரப்பு சார்பாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என்பதால் அரசு தரப்பு வழக்கறிஞர் தேவசந்திரன் ஆஜரானார். இதனால் ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.