வரதட்சணை கொடுமை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: தேனி கோர்ட் அதிரடி தீர்ப்பு!

வரதட்சணை கொடுமை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: தேனி கோர்ட் அதிரடி தீர்ப்பு!
Published on
Updated on
1 min read

மனைவியை வரதட்சணை கொடுமை செய்து, துன்புறுத்தி, தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

தேனி அரண்மனை புதூரை சேர்ந்த தங்கம் என்பவர் அவரது மகள் தங்கலட்சுமியை க.விலக்கு பகுதியைச் சேர்ந்த சிங்கராஜ் என்பவருக்கு 2005 ஆம் ஆண்டு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு மனைவி தங்கலட்சுமியிடம் அவரது கணவர் சிங்கராஜ் வரதட்சனை கேட்டு சில மாதங்களாக கொடுமைப்படுத்தி துன்புறுத்தி வந்த நிலையில் கொடுமை தாங்க முடியாமல் தங்கலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்.

எனவே மகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து தேனி க. விலக்கு காவல் நிலையத்தில் தனலட்சுமியின் தந்தை தங்கம் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப் படுத்தியதால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவுற்று இன்று கணவர் சிங்கராஜ் அவரது மனைவியான தங்கலட்சுமியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது, தற்கொலை செய்ய தூண்டியதற்க்கான சாட்சிகளின் அடிப்படையில் சிங்கராஜ் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதால் கணவர் சிங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கினார்.

மேலும் இந்த தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளி சிங்கராஜ் என்பவரை சிறையில் அடைக்க காவல்துறையினர்  அழைத்துச் சென்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com