சென்னை அமைந்தகரையில் நேற்று 9 வயது சிறுமி வீட்டிற்கு மாவு வாங்கிக்கொண்டு சாலையில் நடந்து செல்லும் போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முதியவர் முரளிதரன்(56) என்பவர் சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று கோயம்பேடு பகுதியில் உள்ள இருட்டு பகுதியில் உள்ள முட்புதரில் வைத்து சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பயந்து போன சிறுமி முதியவரை தள்ளிவிட்டு அங்கு இருந்து தப்பித்து ஒடி வருவதை பார்த்த பொது மக்கள் சிறுமியை மடக்கி கேட்ட போது அப்போது சிறுமி நடந்ததை அழுதுகொண்டு கூறியதை அடுத்து, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.