முதியவரை கவனிக்க ஆள் இல்லை... சாலையில் தூக்கி போட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள்!!

முதியவரை கவனிக்க ஆள் இல்லை... சாலையில் தூக்கி போட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள்!!
Published on
Updated on
1 min read

நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த முதியவருக்கு யரும் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை தூக்கி சென்று சாலையில் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அருகே வேட்டாம்பாடி கிராமத்தை சேர்ந்த முதியவர் ராஜமாணிக்கம். உறவினர்களால் கைவிடப்பட்டு தனியாக வசித்து வரும் இவர், ஒரு தனியார் பள்ளியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக, உடல் நிலை குன்றி படுத்த படுக்கையோடு இருந்ததாக கூறப்படுகிறது.  இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கடந்த 7 ம் தேதி வீட்டில் இருந்த ராஜமாணிக்கத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு  ராஜமாணிக்கத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய கால்களுக்கு சிகிச்சையும் அளித்துள்ளனர்.

இந்நிலையில், ராஜமாணிக்கத்திற்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை இன்று அதிகாலை 3 மணி அளவில், மருத்துவமனைக்கு வெளியே கொண்டு ராஜமாணிக்கத்தை  சாலையின் ஒரமாக போட்டு விட்டதாக கூறப்படுகிறது.

சாலையில் கிடந்த ராஜமாணிக்கத்தை கவனிக்க யாரும் இல்லாததால் சுமார் 5 மணி நேரமாக வலியால் துடித்துக்கொண்டிருந்தார். இதையறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் அவரை மீட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை, யார் மருத்துவமனைக்கு வெளியே விட்டார்கள் என அரசு கல்லூரி முதல்வர் தொடர் விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக அலுவலர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்ட போது, இது போன்ற சம்பவம் நடப்பதற்கு வாய்ப்பில்லை, இருந்தாலும் விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com