மேட்டூர் எம்.எல்.ஏ மீது மருமகள் வரதட்சணை புகார்!

மேட்டூர் எம்.எல்.ஏ மீது மருமகள் வரதட்சணை புகார்!
Published on
Updated on
1 min read

தொகுதி பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் குடும்ப பிரச்சினைகளை பார்க்க முடியவில்லை என வரதட்சனை புகாரில் சிக்கிய மேட்டூர் எம் எல் ஏ சதாசிவம் விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பாமகவை சேர்ந்த சதாசிவம் உள்ளார். இவரது மருமகள் மனோலியா அளித்த புகாரின் பேரில் சதாசிவம், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் மீது போலீசார் வரதட்சனை கொடுமை உட்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சதாசிவம் காவல் நிலையத்தில் ஆஜராகி போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி அதற்கான சம்பணை பெற்றுக் கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குடும்ப பிரச்சனையில் பக்குவம் இல்லாமல் தனது மருமகள் போலீசை நாடி உள்ளதாகவும், வழக்குரைஞரின் பேச்சைக் கேட்டு பொய்யாக புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த புகாரின் மீது போலீசார் விசாரிக்காமலேயே பொய்யாக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டிய சதாசிவம், தொகுதி பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் குடும்ப பிரச்சினைகளை பார்க்க முடியவில்லை என விளக்கமளித்தார். மேலும் தனது  நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலீசார் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com