அரியலூர் பட்டாசு ஆலை விபத்து... உரிமையாளர்கள் கைது!!

Published on
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்து தொடா்பாக ஆலை உாிமையாளா் மற்றும் அவரது மருமகன் ஆகிய இருவரை போலீசாா் கைது செய்தனா்.

அரியலூர் மாவட்டம் வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் கடையில் தீபாவளி விற்பனைக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசு ரகங்கள் வெடித்து சிதறின.

இந்த பயங்கர வெடி விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த  விருதுநகரை சோ்ந்த சீனு, பன்னீர்செல்வம், வெற்றியூரை சோ்ந்த ரவி, வீரகாலூரை சோ்ந்த சிவகாமி உள்ளிட்ட 11 பேர் பாிதாபமாக உயிாிழந்தனா். படுகாயமடைந்த மேலும் 13 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய்  நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

இந்நிலையில் வெடி விபத்தில் படுகாயம் அடைந்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர்கள் கணேசன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனா்.

தொடா்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கணேசன், பாதுகாப்பு முறையாக இல்லாத தொழிற்சாலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தொிவித்தாா். 

இந்நிலையில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் ஆலையை நிர்வகித்து வரும் அவரது மருமகன் அருண்குமார் ஆகியோர் மீது விபத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com