ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்குகள்: அதிரடி காட்டும் குற்றப் புலனாய்வு துறையினர்.

’ஆறு மாதத்தில் 700 வழக்குகள்; 500 குற்றவாளிகள்’
ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்குகள்:  அதிரடி காட்டும் குற்றப் புலனாய்வு துறையினர்.
Published on
Updated on
1 min read

ஆறு மாதத்தில் 700 வழக்குகள் பதிவு செய்து, 500 குற்றவாளிகளை கைது செய்து, 44 டன் அரிசிகளை பறிமுதல் செய்து சென்னை மண்டல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர்.

12 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறையினர் கடத்தல் மற்றும் பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.

ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை கடத்தல் மற்றும் பதுக்கலுக்கு எதிராக 764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதில் ஈடுபட்ட 525 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் நடத்திய சோதனையின் மூலமாக ரேஷன் அரிசி 44 டன் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் மண்ணெண்ணெய் 75 லிட்டர் மற்றும் கலப்பட ஆயில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 700 லிட்டர், வணிகத்துக்காக பயன்படுத்திய வீட்டு சிலிண்டர் 445 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இந்த வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் 81 பேருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com