நகை பட்டறையில் கொள்ளைப்போன 67 கிராம் தங்கம்...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு...!

நகை பட்டறையில் கொள்ளைப்போன 67 கிராம் தங்கம்...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு...!
Published on
Updated on
1 min read

கோவை சன்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். இவர் டவுன்ஹால் அடுத்த மரக்கார கவுண்டர் வீதியில் மோகன் டை வர்க்ஸ் என்ற பெயரில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். அதே கடையில் பணியாளராக பணிபுரித்து வந்த மஹாராஷ்டிராவை சேர்ந்த பிரமோத் விட்டல் என்ற நபரிடம் நேற்று காலை கடை சாவியை கொடுத்துள்ளார். அவர் வழக்கம்போல் நேற்று காலை பணிக்காக கடையை திறந்து அங்கு லாக்கரில் இருந்த சுமார் 1067. 50 கிராம் எடையிலான நகையை எடுத்து தலைமறைவாகி உள்ளார்.

தொடர்ந்து பிற்பகலில் வந்த பட்டறை உரிமையாளர், லாக்கர் திறந்திருந்ததுடன், அதிலிருந்த நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த ஊழியரை தொடர்புகொண்ட போது, அவரருடைய தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த உரிமையாளர், சம்பவம் தொடர்பாக வெறைட்டி ஹால் காவல்நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள வெறைட்டி ஹால் காவல்நிலைய புலணாய்வு பிரிவு போலீசார் தலைமறைவாகியுள்ள பட்டறை ஊழியரான ப்ரமோத் விட்டல் போசலே என்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த காட்சிகளில், அந்த இளைஞர்  யாருடனோ போனில் பேசிய படியே கொள்ளையடிப்பது பதிவாகியிருப்பதால் இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாரெல்லாம்  தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com