பூட்டோ குடும்பம் தொடர்ந்து இந்தியாவை எதிர்க்க காரணமும் பின்னணியும் என்ன?!!!

பூட்டோ குடும்பம் தொடர்ந்து இந்தியாவை எதிர்க்க காரணமும் பின்னணியும் என்ன?!!!
Published on
Updated on
2 min read

சுல்பிகர் பூட்டோ இந்தியாவுடன் பல வழிகளில் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தார். மும்பை மற்றும் ஜூனாகத் உடனான அவரது உறவுகள் பற்றிய தகவல்கள் அனைவரும் அறிந்ததே.  பூட்டோ மும்பையில் உள்ள புகழ்பெற்ற கதீட்ரல் பள்ளியில் படிக்கும் போது, ​​அவரது சிறந்த நண்பர் பீலு மோடி.

மும்பையில் உள்ள கதீட்ரல் பள்ளியின் பெயரை பிலாவல் பூட்டோ சர்தாரி அவரது தாயார் பெனாசிர் பூட்டோ மூலமாக தெரிந்திருக்கலாம். 1947 இல் பாகிஸ்தான் தனிநாடாக உருவானபோது, ​​பிலாவல் பூட்டோவின் தாய்வழி தாத்தா சுல்பிகர் அலி பூட்டோ இந்தப் பள்ளியை விட்டு வெளியேறி பாகிஸ்தான் செல்லவில்லை.  மாறாக 1950ல் தான், பூட்டோவின் குடும்பம் நிரந்தரமாக பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது.  

இது முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட நாடாக இருந்தும் எதற்காக மூன்று ஆண்டு தாமதம் என அவரது அரசியல் எதிரிகள் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுடனான அவரது விசுவாசம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இந்த விமர்சனங்களை தவிர்க்கவே, பூட்டோவின் குடும்பமானது ஒரே வழியை பின்பற்றி வருகிறது.  அது என்னவென்றால் இந்தியாவை கடுமையாக எதிர்ப்பது. இந்தியாவை எதிர்ப்பது மட்டுமே.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு நியூயார்க்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடியை பிலாவல் பூட்டோ சர்தாரி 'குஜராத்தின் கசாப்புக்காரன்' என அழைத்திருந்தார்.  ஆனால் பிலாவலின் இத்தகைய தரமற்ற பேச்சுக்களில் ஆச்சரியப்படத் தேவையில்லை.  ஏனென்றால் இந்தியாவை எதிர்ப்பதில் தனது எதிர்கால வாய்ப்புகள் மறைந்துள்ளன என்பதை அவர் நன்கு அறிவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.  அவர் இந்தியாவையும் இந்துக்களையும் எவ்வளவு அதிகமாக எதிர்க்கிறார் அந்த அளவுக்கு அவர் நாட்டில் அவர் பிரபலமாகவும் நம்பிக்கையையும் பெற முடியும். 

சுல்பிகர் பூட்டோ இந்தியாவுடன் பல வழிகளில் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தார்.  மும்பை மற்றும் ஜூனாகத் உடனான அவரது உறவுகள் பற்றிய தகவல்கள் அனைவரும் அறிந்ததே. பூட்டோ மும்பையில் உள்ள புகழ்பெற்ற கதீட்ரல் பள்ளியில் படிக்கும் போது, ​​அவரது நெருங்கிய நண்பர் பீலு மோடி ஆவார்.  1946ல் நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தபோதிலும், சுல்பிகர் இரு தேசக் கோட்பாட்டை நம்பியதாக பீலு மோடி அவரது ”ஜூல்ஃபி மை ஃப்ரெண்ட்” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். ஜின்னாவின் இயக்கம் சரியானது என்று சுல்பிகர் பூட்டோ கருதியதாகவும் அவர் கூறியுள்ளார். பூட்டோவின் தந்தை சர் ஷாநவாஸ் பூட்டோ, இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் இன்றைய குஜராத்தில் உள்ள ஜூனாகத் சமஸ்தானத்தின் பிரதமராக இருந்துள்ளார். 

இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் பூட்டோவின் தாயார் ஒரு இந்து.  திருமணத்திற்கு முன்னர் அவரது பெயர் லக்கிபாய்.  மதமாற்றத்திற்கு பின்னர் குர்ஷித் பேகம் ஆனார்.  லக்கிபாய் ராஜபுத்திர குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.   திருமணத்திற்கு முன்பே அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.  ஷாநவாஸ் பூட்டோ மே 30, 1947 முதல் நவம்பர் 8, 1947 வரை ஜுனாகத்தின் பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.  அதாவது, பாகிஸ்தான் உருவாகி பல மாதங்கள் வரை அவர் பிரதமராக இந்தியாவில் பணியாற்றியுள்ளார்.  பெனாசிர் பூட்டோ கொடூரமாக கொல்லப்பட்டபோது, ​​ஜுனாகத்திலும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இங்கு வசிப்பவர்கள் பெனாசிர் பூட்டோவை அவர்களில் ஒருவராகவே கருதி வந்தனர். 

நாடு பிரிவினையின் போது பூட்டோ மற்றும் அவரது குடும்பத்தினர் ஏன் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்ற பெரிய கேள்வி தற்போது வரை உள்ளது.  1948ஆம் ஆண்டு காந்திஜி படுகொலை செய்யப்பட்டபோது, சுல்பிகர் பூட்டோ ​​அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தார்.  தற்செயலாக பீலு மோடியும் அங்கு இருந்துள்ளார். மோடிக்கு சுல்பிகர் பூட்டோ ஆறுதல் கூறியுள்ளார்.  செப்டம்பர் 11, 1948 அன்று ஜின்னா இறந்தபோது சுல்பிகர் பூட்டோ மும்பையில் இருந்துள்ளார்.  பூட்டோ 1973 முதல் 1977 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார்.  பாகிஸ்தான் பிரிவினையில் முக்கியப் பங்காற்றியவர் 1973 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமரானாரனது எவ்வாறு என்று கற்பனை செய்து பாருங்கள்.  

சுல்பிகர் அலி பூட்டோ ஏப்ரல் 4, 1979 அன்று தூக்கிலிடப்பட்டார்.  அவர் இறந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் பிரதமரானார்.  இந்தியா மீதான பெனாசிரின் எதிர்ப்பு அவரது தந்தையின் அளவிற்கு வலுவாக இல்லை.  இருப்பினும், இரண்டு கேள்விகளுக்கு இன்று வரை பதிலளிக்கப்படவில்லை:  ஒரு இந்து தாயின் மகன் ஏன் இந்தியாவுக்கு எதிராக கடுமையாக இருந்தார் மற்றும் பூட்டோ குடும்பம் ஏன் நாடு பிரிந்தவுடன் உடனடியாக பாகிஸ்தானுக்கு செல்லவில்லை? 

தற்போது பிலாவல் பூட்டோ சர்தாரி தனது தாத்தாவின் அடிச்சுவடுகளையே பின்பற்றி வருகிறார்.  எலலாவற்றிற்கும் மேலாக, பாகிஸ்தானின் வசீர்-இ-ஆசாம் ஆக வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கம்.  அதாவது பாகிஸ்தானின் பிரதமராவதே அவரது ஒரே லட்சியமாகும்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com