குடியரசு தினவிழாவில் பங்கேற்க வேண்டுமா....ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எவ்வாறு....தெரிந்துகொள்ளலாம்!!!

குடியரசு தினவிழாவில் பங்கேற்க வேண்டுமா....ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எவ்வாறு....தெரிந்துகொள்ளலாம்!!!
Published on
Updated on
2 min read

நாடு தனது 74வது குடியரசு தினத்தை  இந்த ஆண்டு ஜனவரி 26, 2023 அன்று கொண்டாவுள்ளது .  1950 ஆம் ஆண்டு இதே நாளில், அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்தியதை நினைவுகூரும் வகையில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

விழா ஏற்பாடுகள்:

குடியரசு தின விழா அணிவகுப்பிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  கடந்த ஆண்டு செப்டம்பரில் ராஜ்பாத்தின் பெயரை கடமையின் பாதை என்று பிரதமர் மோடி மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.  இங்கு குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுவது இதுவே முதல் முறை.

அணிவகுப்பு:

குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்ட பொதுவான மற்றும் சிறப்பு விருந்தினர்கள்பங்கேற்கின்றனர்.  மற்ற நாடுகளிலிருந்தும் விருந்தினர்கள் அழைக்கப்படுகின்றனர். எந்தவொரு நாட்டின் தலைவரையும் அழைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது.  இந்தியாவின் வீரம் நிறைந்த இந்த தருணத்தைக் காண ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் ராஜ்பாத்தில் இருந்து செங்கோட்டை வரை ஒவ்வொரு ஆண்டும் ஒன்று சேர்கின்றனர்.

சிறப்பு விருந்தினர்:

ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிற நாட்டு தலைவர் அழைக்கப்பட்டுள்ளார்.  இம்முறை, 26 ஜனவரி 2023 அன்று நடைபெறவுள்ள குடியரசு தின நிகழ்ச்சியில், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.  

கடந்த இரண்டு ஆண்டுகளாக:

கோவிட் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக தலைமை விருந்தினர் யாரும் அழைக்கப்படாத நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை எகிப்து அதிபர் குடியரசு தின விழாவை சிறப்பிக்கவுள்ளார்.

ஆன்லைன் டிக்கெட்டுகள்:

குடியரசு தின விழாவுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்குவது ஜனவரி 6-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.  அதே நேரத்தில், ஜனவரி 9 முதல், மக்கள் டிக்கெட் கவுன்டர்களில் நேரில் டிக்கெட் வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  குடியரசு தின அணிவகுப்புக்கான டிக்கெட்டுகளை பாதுகாப்பு அமைச்சகத்தின் www.amantran.gov.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வாங்க முடியும்.  இந்த ஆண்டு, மக்கள் குடியரசு தின டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய aamantran.mod.gov.in என்ற ஆன்லைன் போர்ட்டலை இந்திய அரசு அமைத்துள்ளது .

வழிமுறைகள்:

  • முதலில் aamantran.mod.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் .

  • பெயர், தந்தை/கணவரின் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் நிரந்தர முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு உங்களைப் பதிவு செய்யுங்கள்.

  • உள்நுழைவு பக்கத்திற்குச் செல்லவும்.

  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.

  • கேப்ட்சாவை சரிபார்க்கவும்.

  • 'ஓடிபி கோரிக்கை' என்பதைக் கிளிக் செய்யவும்.

  • உரைச் செய்தி மூலம் உங்கள் மொபைல் எண்ணில் நீங்கள் பெறும் OTPஐ உள்ளிடவும்.

  • நீங்கள் பங்கேற்க விரும்பும் குடியரசு தின நிகழ்வைத் தேர்ந்தெடுக்கவும்.

  • பங்கேற்பாளர்களின் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.

  • சரியான அடையாளச் சான்றினைப் பதிவேற்றவும்.

  • கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கவும்.

  • பதிவு செய்யப்பட்ட ஒரு மொபைல் எண்ணின் மூலம் 10 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

  • ஒவ்வொரு குடியரசு தின டிக்கெட்டிலும் QR குறியீடு இருக்கும், இது குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் ஸ்கேன் செய்யப்படும்.

  • நீங்கள் கலந்துகொள்ள விரும்பும் நிகழ்வின் வகையைப் பொறுத்து குடியரசு தின டிக்கெட்டுகளின் விலை ரூ.20, ரூ.100 மற்றும் ரூ.500 என மாறுபடும்.

  • குடியரசு தின டிக்கெட்டுகள் காலை 9 மணி முதல் 12:30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும் கிடைக்கும்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com