ரூ.3.5 லட்சம் கட்டுமாறு மிரட்டிய மர்ம கும்பல்... நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட வீடியோ...

ரூ.3.5 லட்சம் கட்டுமாறு மிரட்டிய மர்ம கும்பல்... நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட வீடியோ...
Published on
Updated on
1 min read

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு.

தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இருட்டு அறையில் முரட்டுக்குத்து ஆகிய படங்களில் நடித்து வந்து வந்தார்.

கடந்த சில வருடங்களாக சினிமா பட வாய்ப்புகள் ஏதும் அமையாததால், கடை திறப்பு நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கவர்ச்சி உடையில் வந்து காண்போரை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் மர்மகும்பல் தன்னிடம் மோசடியில் ஈடுபட முயற்சித்ததாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மர்ம எண்ணில் இருந்து போன் செய்த நபர் ஒருவர், ஷாலு ஷம்முவிடம் 3 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு ஆன்லைனில் பொருட்கள் வாங்கியிருப்பதாகவும், அதற்கான பணத்தை கட்டுமாறும் கூறியுள்ளார்.

இதற்கு நடிகை ஷாலு ஷம்மு, தான் எந்த பொருட்களையும் வாங்கவில்லை என கூறவே, அதற்கு மறுமுனையில் இருந்தவர்கள், கிரெடிட் கார்டு மேல் உள்ள கடைசி 4 இலக்க எண்களையும், பிறந்த தேதியையும் கொடுக்குமாறு பேசியுள்ளார்.

இது மோசடி கும்பல்தான் என உறுதி செய்த ஷாலு ஷம்மு, திட்டித் தீர்த்ததுடன், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாய் பேசி போன் இணைப்பை துண்டித்தார்.

தனக்கு நேர்ந்தது போல வேறு யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது என எண்ணியவர், இதுகுறித்து வீடியோ வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளப் பக்கத்தை மர்மநபர்கள் முடக்கி விட்டதாக சென்னை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் ஷாலு ஷம்மு புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் மர்மநபர்கள் தன்னிடம் பண மோசடியில் ஈடுபடுவதாக வீடியோ வெளியிட்டிருக்கும் நிலையில் மீண்டும் காவல்நிலையத்தை நாடவிருக்கிறார் ஷாலு ஷம்மு.

மாலைமுரசு செய்திகளுக்காக செய்தியாளர் ராகவேந்தர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com