கடந்த இரண்டு வருடங்களாக கொரோன தொற்று காரணமாக மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இருந்தும் பொது இடங்களில் பலர் மாஸ்க் அணியாமல் திரிவதனால் அபராதம் செலுத்தி கொண்டுதான் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவின் புதிய பிறழ்வான ஓமைக்ரோன் வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதனால் பல தேசங்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்ததுடன் மாஸ்க் அணிவதையும் கட்டாயமாகியுள்ளது.
ஆனால் உலகில் சில இடங்களில் நோய்த்தொற்றின் தீவிரம் தெரியாத பலர் முகமூடி அணிய வேண்டியதை எதிர்த்து வருகின்றனர் இப்படியே இன்னும் சில காலம் நாம் முகமூடி அணிந்து கொண்டு சென்றால் வருங்கால சந்ததியர்கள் வாயை அந்தரங்க உறுப்பாக நினைத்து கொள்வர் என்று காரணம் தெரிவிக்கின்றனர்.
இப்படியிருக்க புளோரிடாவில் உள்ள யுனைடெட் ஏர்லைன்ஸில் பயணி ஒருவர் முகமூடி ஆணையை எதிர்க்கும் வகையில் தன்னுடைய முகத்தில் முகமூடிக்கு பதிலாக சிவப்புநிற பெண்கள் உள்ளாடையை அணிந்து வந்தார். இவரை போன்றே இதற்கு முன்னர் பலர் இதுபோன்று உள்ளாடையை முகத்தில் அணிந்து கொண்டு கட்டாய முகமூடி ஆணைக்கான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவிற்கு சொந்தகமான யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே ஒரு பயணி இம்மாதிரியான ஒரு செயலை செய்துள்ளது சகபயணிகளை முகம் சுளிக்கவைத்துள்ளது. முகத்தில் பெண்கள் உள்ளாடையை அணிந்து வந்த ஆடம் ஜென்னே என்ற நபரை விமான பணிப்பெண் சரியான முகமூடியை அணிய சொல்லி கேட்டுக்கொண்டுள்ளார் ஆனால் அதை செய்ய மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார் அந்த நபர். இதனால் விமானம் சற்று நேரம் சலசலப்புடன் காணப்பட்டது. பின்பு இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயலை செய்ததனால் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படுவதற்கு முன்பு அந்த நபர் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இப்படி பயணி ஒருவர் தனது சர்ச்சைக்குரிய செயலால் விமானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதனை தொடர்ந்து அங்குள்ள உள்ளூர் செய்தி சேனலான NBC2 அந்த நபரை பேட்டி எடுத்தது அதில் அவர், பயணிகளை விமானங்களில் முகமூடிகளை அணியுமாறு கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் சாப்பிடவும் குடிக்கவும் அவர்களை அகற்ற அனுமதி அளிக்கிறது இதுபோன்ற அபத்தத்தை வெளிக்காட்டவே இவ்வாறு செய்ததாகவும் முகமூடி ஆணையால் தான் மிகவும் நொந்துபோய்விட்டதால் இந்த சிரமத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி செய்தேன் என்றும் ஆடம் ஜென்னே தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது அதில், "வாடிக்கையாளர் ஃபெடரல் மாஸ்க் கட்டளைக்கு இணங்கவில்லை என்பதை அறிந்து, விமானம் புறப்படுவதற்கு முன்பே இதுபோன்ற இடையூறுகளைத் விளைவிக்கும் நபர்களை தவிர்த்து, நடுவானில் எழவிருந்த சிக்கலைத் தரையிலே தீர்த்துள்ள எங்கள் குழுவை நாங்கள் பாராட்டுகிறோம்." என்று தெரிவித்திருந்தது. அத்துடன் ஆடம் ஜென்னேவிற்கு பயணிகள் சம்பவ மறுஆய்வுக் குழுவால் அவரது வழக்கை மதிப்பாய்வு செய்யும் வரை அவர் இப்போது அதன் விமான நிறுவனத்தில் இருந்து தடை செய்யப்படுவதாக மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
இந்த சம்பவம் இணையத்தில் பெரிதும் பேசுபொருளாக மாறியுள்ளது இதுபோன்று காட்டாயம் மாஸ்க் அணியும் ஆணையை எதிர்த்து குரல்கொடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது, இதனால் தான் மாஸ்க் அணிவதை செருப்பு அணிவது போன்று கௌரவ பிரச்சனையாக பார்க்கவேண்டும் என்று கமல்ஹாசன் போன்ற தேசியவாதிகள் அங்கங்கே தெரிவித்து வருகின்றனர்.