ஆந்திர மாநிலத்தில் எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கிய மாநில அரசின் உத்தரவை எதிர்த்து 2004 ஆம் உச்ச நீதிமன்றத்தில் சின்னையா என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.அந்த வழக்கின் தீர்ப்பில் 'ஒரே மாதிரியான சமூகப்பிரிவுக்குள்' துணை வகைப்படுத்தல் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும் 2014 ஆம் 5 நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு அளித்திருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து ஆந்திர மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இந்த வழக்கானது 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுப்பட்டது. அத்துடன் பஞ்சாப் ,ஹரியானா அதிக மாநிலங்களில் வழக்குகளும் இந்த அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.இந்த வழக்குகளின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்துவைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பானது நேற்றைய தினம் வழங்கப்பட்டது.அதில் பட்டியலின மற்றும் பழங்குடி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளார். மேலும் இந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளை சட்டப்பிரிவுகள் 15,16,341 என எந்த பிரிவும் தடுக்காது எனவும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதே போல ஒரு சமூக பிரிவில் துணைப் பிரிவுகளை வகுக்க அரசியல் அமைப்பில் சட்டப்பிரிவு 14 அனுமதி அளிப்பதாகவும்.கூடுதல் இடஒதுக்கீடு பலனை அனுமதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த துணைவகைப்படுதலை நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்ய முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அதே போல எஸ்.சி,எஸ்.டி இடஒதுக்கீட்டில் 'கிரீமி லேயரை' அடையாளம் காணவும் , இடஒதுக்கீட்டிலிருந்து அவர்களை வெளியேற்றவும் அரசு ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் எனவும் அதுவே உண்மையான சமத்துவத்தை அடைவதற்கான ஒரே வழி எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பானது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.