பிரதமர் மோடியை கடுமையாக தாக்கிய பாகிஸ்தான்....பதிலடி கொடுத்த இந்தியா!!!

அண்டை நாட்டு நாடாளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய ஒசாமா பின்லேடனுக்கு விருந்தளித்த, நாட்டிற்கு, இந்த சபையில் வந்து பிரசங்கம் செய்யும் அளவுக்கு நம்பகத்தன்மை இல்லை.
பிரதமர் மோடியை கடுமையாக தாக்கிய பாகிஸ்தான்....பதிலடி கொடுத்த இந்தியா!!!
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் கோபமடைந்த பாஜகவினர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.  அதே நேரத்தில், பிலாவல் பூட்டோ சர்தாரியின் கருத்துக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குரும் தகுந்த பதிலளித்துள்ளார்.  

மூக்குடைத்த ஜெய்சங்கர்:

இதற்கு முன்னதாக, வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஐ.நா. சபையில் பேசுகையில் “காஷ்மீர் சர்ச்சையை மீண்டும் எழுப்பி ஐ.நா. சபையில் பாகிஸ்தான் சார்பாக வெளியுறவுதுறை அமைச்சர் பிலாவல் பூட்டோ  கடுமையான எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளார்.   ஆனால் அண்டை நாட்டு நாடாளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய ஒசாமா பின்லேடனுக்கு விருந்தளித்த நாட்டிற்கு, இந்த சபையில் வந்து பிரசங்கம் செய்யும் அளவுக்கு நம்பகத்தன்மை இல்லை” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

தாக்கூரின் பதிலடி:

”பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த கருத்து மிகவும் வெட்கக்கேடானது.  1971ஆம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. ஒருவேளை அவர்கள் இன்னும் அந்த வலியில் இருக்கலாம்.  பாகிஸ்தானின் கோமாளித்தனங்களையும் திட்டங்களையும் உலகமே பார்த்தது.  அவர்கள் நீண்டகாலமாக பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகின்றனர்.  பயங்கரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார்.  பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது.  பாகிஸ்தானில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்தது. ” என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பூட்டோவின் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார்.

பிரதமர் மோடி மீதான தாக்குதல்:

பிரதமர் மோடி மீது பூட்டோ தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினார்.  நியூயார்க்கில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பிலாவல் பூட்டோ பேசுகையில் அனைத்து வரம்புகளையும் கடந்து பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.  9/11 மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ​​பிரதமர் மோடிக்கு எதிராக அவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

அதாவது “பிரதமராவதற்கு முன்பு மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதித்திருந்தது.  பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்.  ஹிட்லரின் சித்தாந்தத்தை இந்திய அரசு நம்புகிறது.” என பிலாவல் பூட்டோ பிரதமரையும் பிரதமரது அரசையும் குறித்து சர்ச்சை கருத்து கூறினார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com