விதியின் 110ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்  என்னென்ன...?

விதியின் 110ன்  கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்  என்னென்ன...?
Published on
Updated on
1 min read

விதியின் 110ன் கீழ்  முதலமைச்சர் ஸ்டாலின்  அறிவிப்புகள் வெளியீடு...!

மூன்றாம் நாள் கூட்டத்தொடர்:

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கியது. அதன்படி மூன்றாம் மற்றும் இறுதி நாளான இன்று கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.  சட்டசபையின் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், விதி 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார். 

3337 அறிவிப்புகள் வெளியீடு:

முதலில் தமிழ்நாட்டை வளமான மாநிலமாக உருவாக்கிட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றும், சமூக மேம்பாட்டிலும் தனிமனித வளர்ச்சியிலும் இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும் என்றும், தேர்தல் அறிக்கை மட்டும் அல்லாமல் தேர்தல் அறிக்கையில் இல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இதுவரை 3337 அறிவிப்புகள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளன.

110ன் கீழ் அறிவிப்புகள் வெளியீடு:

இப்படி பல்வேறு அறிவிப்புகளை மக்கள் நலன் கருதி வெளியிட்டு செயல்படுத்தி வரக்கூடிய நிலையில், இன்றைய தினம் “ பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, போக்குவரத்துத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் சார்பில் சில அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தெரிவித்தார். 

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகள்:

காலை உணவுத்திட்டம் இல்லம் தேடி கல்வி எண்ணும் எழுத்தும் திட்டம் மாதிரி பள்ளிகள் நான் முதல்வன் தகைசால் பள்ளிகள் என பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 500 வகுப்பறைகள் கட்டப்படும் என அறிவித்தார்.

நகராட்சி  நிர்வாகத்துறை அறிவிப்புகள்: 

"சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும்" எனவும், அதற்கு "சிறப்பு நிதியாக நடப்பு நிதியாண்டில் ரூ.2,200 கோடி செலவில் 4,600 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்" எனவும் அறிவித்தார்.

போக்குவரத்துத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்புகள்: 

இலவச பேருந்துத் திட்டத்தின் மூலம் 44 லட்சம் மகளிர் நாள்தோறும் பயன்பெறுவதாகவும், இதனால் 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் அவர்களுக்கு சேமிப்பாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, ரூ.500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் எனவும் அறிவித்தார். இவ்வாறு விதி 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com