நேபாளம்: விமான விபத்தில் 19 பேர் பலி... ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்...

நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
நேபாளம்: விமான விபத்தில் 19 பேர் பலி... ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்...
Published on
Updated on
2 min read

நேபாளத்தில் தலைநகர் காத்மாண்டில் இருந்து பொக்காரா நகருக்கு ஜூலை 24-ம் தேதியன்று விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த பொக்காரா என்ற பகுதி சமீபத்தில்தான் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பொக்காரா பகுதிக்கு அடிக்கடி சுற்றுலா கிளம்புவோர், காத்மாண்டுவில் இருந்து விமானத்தில் செல்வது வழக்கம்.

இந்நிலையில் பராமரிப்புக்காக சவுர்யா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பொக்காராவுக்கு ஓட்டிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டானது. அதன்படி 24-ம் தேதி திரிபுவன் சர்வதேச விமான நிலையில் இருந்து கிளம்பிய விமானத்தில் விமான ஊழியர்கள் இவர்களுடன் 2 விமானிகள் என மொத்தம் 19 பேர் பயணித்தனர்.

CRJ200 என்ற இந்த விமானம் சுமார் 50 பேர் அமரக்கூடியது. ஆனால் பராமரிப்புக்காக சுற்றுலாப் பயணிகளைத் தவிர, விமான ஊழியர்கள் மட்டுமே பயணித்தனர்.

ஓடுபாதையில் வேகமாக சென்ற விமானம் உடனே மேலே எழுந்து பறக்க வேண்டும். ஆனால் திடீரென ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம், அருகில் இருந்த மற்றொரு வாகனத்தின் றெக்கையில் மோதியது.

இதனால் விமானத்தில் திடீர் தீ பற்றியதைத் தொடர்ந்து அதில் பயணித்தவர்கள் அலறித்துடித்தனர். இதில் விமானத்தை இயக்கிய கேப்டன் எம்.ஆர்.ஷக்யா என்பவர் மட்டும் அவசரவழியில் குதித்து தப்பித்தார்.

ஆனால் மீதமுள்ள 18 பேரும் விமானத்திலேயே சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானி, விமானத்தை இயக்கி டேக்ஆப் செய்தவுடன், தவறுதலாக எந்த பட்டனையும் அழுத்தியிருக்கலாம் என்றும், அதனால் வானில் பறக்க வேண்டிய விமானம் தடுமாறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரியில் பொக்காரா விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த வருடம் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com