”கடவுள் அனுக்கிரகம் இல்லை” மோர்பி தொங்கும் பாலம் விபத்தில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம்!!

”கடவுள் அனுக்கிரகம் இல்லை”  மோர்பி தொங்கும் பாலம் விபத்தில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம்!!
Published on
Updated on
1 min read

ஓரேவா நிறுவனத்தின் ஊடக மேலாளர் தீபக் பரேக் இந்த வேதனையான விபத்தில் இருந்து முற்றிலும் விலகிவிட்டார். இதற்கு முன்பும் நாங்கள் சீரமைப்பு பணி செய்துள்ளோம்.  ஆனால் இந்த முறை கடவுள் அருள் கிடைக்கவில்லை. 

மோர்பி தொங்கும் பாலம் விபத்து:

குஜராத்தில் மோர்பி பாலம் விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 135 பேர் இறந்துள்ளனர்.  மேலும் இறந்தவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  

கடவுள்தான் காரணம்:

இந்த பாலம் விபத்துக்குப் பிறகு, பல அதிகாரிகளின் அலட்சியம் குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன.  ஆனால் பாலத்தை பழுதுபார்த்து பராமரிக்கும் பணி அளிக்கப்பட்ட ஒரேவா நிறுவனம், விபத்துக்கான முழு பழியையும் கடவுள் மீது சுமத்தியுள்ளது. 

கிடைக்காத அருள்கிரகம்:

ஓரேவா நிறுவனத்தின் ஊடக மேலாளர் தீபக் பரேக் இந்த வேதனையான விபத்தில் இருந்து முற்றிலும் தன்னை விலக்கி கொண்டார்.  இதற்கு முன்பும் நாங்கள் சீரமைப்பு பணி செய்துள்ளோம்.  இந்த முறை கடவுள் அருள் இருக்கவில்லை. அதனால் தான் இந்த விபத்து நடந்துள்ளது என அவர் தரப்பில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com