பேனா நினைவு சின்னம்; திரும்பப் பெறுகிறதா தமிழ்நாடு அரசு?

பேனா நினைவு சின்னம்; திரும்பப் பெறுகிறதா தமிழ்நாடு அரசு?

Published on

கலைஞர் கருணாநிதிக்கு கடலில் பேனா சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதிக்கு மெரினா கடற்கரை அருகே கடலில் பேனா நினைவு சின்னம் எழுப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. கடலின் நடுவே 81 கோடி ரூபாயில் பிரமாண்ட சிலை அமைக்க இருப்பதாக அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இதற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. அதிமுக நாம் தமிழர் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பேனா சிலையை உடைப்போம் எனவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக உச்ச நீதி மன்றம் வரை வழக்கு தொடரப்பட்டது. 

ஆனால் உச்ச நீதிமன்றம் பேனா சிலை அமைப்பதற்கு எதிர்ப்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இப்போது பேனா நினைவு சின்னம் அமைக்கும் முடிவிலிருந்து அரசு பின்வாங்கியுள்ளதாக தெரிகிறது. பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு பதில் பதில் மெரினாவில் அமைந்துள்ள நினைவிடத்தின் அருகில் சிறிய அளவில் சின்னத்தை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இது தொடர்பான அறிவிப்புகள் எதிவும் அதிகாரப் பூர்வமாக வெளியாகாத நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com