ரஷ்யாவுடன் எந்த ஆயுத ஒப்பந்தமும் இல்லை. பல்வேறு நோக்கங்களுக்காக சில நேர்மையற்ற சக்திகளால் கற்பனையாக கூறப்பட்டுள்ளது.
ஹீரோவான செலன்ஸ்கி:
தனது நாட்டின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனை மீண்டும் ரஷியாவுடனே இணைக்க, பல ஆண்டுகளாக போராடி வந்த ரஷ்ய அதிபர் புதின், இந்தாண்டு, எல்லையை மீறி, உக்ரைன் மீது போரே தொடுத்து விட்டார். அவரது பேரிலேயே, உக்ரைனிய மொழியில் இருக்கும் பெயரான, ‘வுலாதிமிர் செலென்ஸ்கி’, உக்ரைன் அதிபராக இருக்க, தனது நாட்டில் இருக்கும் கடைசி உயிர் வரை அனைவரையும் பாதுகாக்க, நேரடியாக களமிறங்கி ஹீரோவாகப் பார்க்கப்படுகிறார்.
புதைகுழியில் ரஷ்யா:
அதுமட்டுமின்றி, உக்ரைன் மீதான போரை தடுக்க, உலக நாடுகள், ரஷ்யா மீது பல வகையான பொருளாதார தடைகளை செலுத்தி வந்த நிலையில், தனித்து விடப்பட்டிருக்கிறது ரஷ்யா. போர் துவங்கிய நேரம், கண்டிப்பாக ரஷ்யா, “ஆள்திரட்டலில்” ஈடுபடாது என அதிபர் புதின் வாக்களித்தாலும், அந்த சிறிய வாக்கைக் கூட காப்பாற்ற முடியாமல் தவித்து வரும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார். உண்மையை சொல்ல போனால், புதின் தற்போது பெரும் புதைகுழியில் சிக்கிக் கொண்டுள்ளார். அவரைக் காக்க அவரது வெற்றியாலும் முடியாது என, உலக போர் மற்றும் அரசியல் நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
ரகசிய உதவி:
இந்நிலையில் ரஷ்யாவிற்கும் பல நாடுகள் ரகசியமாக உதவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கத்திய நாடுகளின் உதவியை உக்ரைன் பெற்றுவரும் அதே நேரத்தில், இப்போது சில நாடுகளும் ரகசியமாக ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகையின் தகவலின்படி, ஈரானுக்குப் பிறகு, வட கொரியா ரஷ்யாவின் தனியார் இராணுவக் குழுவான வாக்னருக்கு பல ஆபத்தான ஆயுதங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மறுத்துள்ள கொரியா:
இந்நிலையில், வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் ரஷ்யாவுடன் எந்த ஆயுத ஒப்பந்தமும் இல்லை என மறுத்துள்ளது மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக சில நேர்மையற்ற சக்திகளால் இது கற்பனையாக கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கற்பனை செய்திகள் நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளது.
-நப்பசலையார்