உலகின் மிகவும் பயங்கரமான சிறையில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறி வீட்டை அடைந்த பாகிஸ்தானியர்.
உலகின் மிகவும் ஆபத்தான குவாண்டனாமோ சிறையிலிருந்து பாகிஸ்தானின் கடைசி கைதியான சைஃபுல்லா பராச்சா நாடு திரும்பியுள்ளார். அவர் சுமார் 20 ஆண்டுகள் இந்த சிறையில் அவரது வாழ்க்கையை செலவழித்து உள்ளார்.
தகவல்களின் படி, 74 வயதான சைஃபுல்லா அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதான சந்தேகத்தின் அடிப்படையில் 2003 இல் பாங்காக்கில் கைது செய்யப்பட்டார். குவாண்டனாமோ வளைகுடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சைபுல்லா விடுவிக்கப்பட்டு பாகிஸ்தானை அடைந்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
20 ஆண்டுகள் சிறைத்தண்டனை:
கடந்த மாதம் பாகிஸ்தானில் உள்ள நாடாளுமன்ற நிலைக்குழு முன் சைஃபுல்லாவின் மகன் ஆஜரானார். பிறப்பால் அவரது குடும்பம் பாகிஸ்தானியர்கள் என்று அவரை அடையாளப்படுத்தி கூறியிருந்தார். 2003 ஆம் ஆண்டு தாய்லாந்து மற்றும் நியூயார்க்கில் இருந்து தனது தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரது தந்தையான சைஃபுல்லாவுக்கு சந்தேகத்தின் அடிப்படையில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டுக் கூறினார். அவரது தந்தை மீது குற்றமில்லை எனவும் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார் சைஃபுல்லாவின் மகன்.
குவாண்டனாமோ வளைகுடா சிறைச்சாலையானது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. உலகின் மிகவும் ஆபத்தான சிறைச்சாலையான குவாண்டனாமோவின் ஒரு பிரிவு ஏப்ரல் 2021 இல் மூடப்பட்டது. குவாண்டனாமோ சிறைச்சாலையின் 7 முகாம்களில் 14 கைதிகளை அடைக்கப்பட்டுள்ளனர். உலகில் பலர் குவாண்டனாமோ சிறையை ’பூமியில் உள்ள நரகம்’ என்றும் அழைக்கிறார்கள்.
குவாண்டனாமோ சிறையில், ஒரு கைதிக்காக சுமார் 93 கோடி செலவிடப்படுகிறது. இதன் காரணமாக இந்த சிறை ஆபத்தானது மற்றும் மிகவும் விலையுயர்ந்த சிறை எனக் கூறப்படுகிறது. உலகை அச்சுறுத்தும் தீவிரவாதிகள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன், இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுதி அரேபியாவை சேர்ந்த கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். இவர் 9/11 தாக்குதலில் தொடர்புள்ளவர் எனக் கூறப்படுகிறது. இந்த சிறைச்சாலை உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய சிறைச்சாலையாக கருதப்படுகிறது. இதை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் பலமுறை எழுந்துள்ளது.