தலைமறைவாயிருந்த பிஎஃப்ஐ செயலாளர் கைது..!!!

தலைமறைவாயிருந்த பிஎஃப்ஐ செயலாளர் கைது..!!!
Published on
Updated on
2 min read

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து 5 ஆண்டுகள் செயல்பட தடைவிதித்துள்ள நிலையில் முக்கிய உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 17 பிப்ரவரி 2007 அன்று உருவாக்கப்பட்டது.  தென்னிந்தியாவின் மூன்று முஸ்லிம் அமைப்புகளை இணைத்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. கேரளாவின் தேசிய ஜனநாயக முன்னணி, கர்நாடகா மன்றம் மற்றும் தமிழ்நாட்டின் மனித நீதி பாசறை ஆகியவை இதில் அடங்கும். தற்போது இந்த அமைப்பு நாட்டின் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கூறுகிறது.

8 இயக்கங்கள் செயல்பட்டது:

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், பிஎப்ஐ என்ற அந்த அமைப்பின் கீழ் 8 இயக்கங்கள் செயல்பட்டதாகவும், இதன் தலைவர்களாக பிஎப்ஐ உறுப்பினர்களே இருந்ததாகவும் தெரிவித்தது. 

பிஎஃப்ஐ உடன் நெருங்கிய தொடர்பு:

மேலும் பிஎப்ஐ மற்றும் அதன் கீழ் செயல்படும் 8 அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், இதனை பிஎப்ஐ தான் உருவாக்கியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், இமான்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உள்ளனர்.

நிதி திரட்ட தீவிரம்:

உறுப்பினர்களை சேர்க்கவும், அவர்கள் மூலம் நிதி திரட்டவும் பிஎப்ஐ தீவிரம் காட்டியதாகவும் கூறப்பட்டது. பிஎப்ஐ உறுப்பினர்களே  அதன் கீழ் செயல்படும் அமைப்புகளுக்கு தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அரசியல் சாசனத்திற்கு எதிரானது:

பிஎப்ஐ உறுப்பினர்கள் மூலம் கேரளாவில் இயங்கும் ரெகாப் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு நிதி திரட்டியது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டு வந்த இந்த அமைப்புகள், வெளியே  ஜனநாயகம் என்ற பெயரில்  கல்வியல், அரசியல், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு:

இதுதவிர நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்திடும் வகையில், இந்த அமைப்பு சொந்த நாட்டிலேயே பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வந்ததும் அப்போது கண்டுபிடிக்கப்பட்டது.

பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கை:

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் அந்த அமைப்பை சேர்ந்த சிலர் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

மாநில செயலாளர் கைது:

தடை செய்யப்பட்ட அமைப்பின் முன்னாள் மாநில செயலாளர் சிஏ ரவூப்பை தேசிய புலனாய்வு அமைப்பு  நேற்று இரவு கைது செய்தது. 

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ரவூப் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு பிஎஃப்ஐ தடை விதித்ததை அடுத்து அவர் தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com