நாட்டுக்கோழி தட்டுபாட்டை போக்க நாட்டுக் கோழி பெருக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தென்காசி பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியில்
கால்நடை மருத்தகம் மற்றும் மருத்துவமனை கட்டிடங்களையும், மாறாந்தை, பொட்டல்புதூர், ஆய்க்குடி மற்றும் வல்லம் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடங்கள், அரியபுரத்தில் கால்நடை மருந்தகம், புல்லுக்காட்டுவலசையில் கிளை நிலையங்களை தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில், இன்று குறும்பலாப் பேரியில் வைத்து துவக்க விழா நடந்தது.
விழாவில் தமிழக மீனவர், மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய மருந்தகம் மற்றும் மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்து பேசிய போது "தமிழகத்தில் பொதுமக்களுக்கு வரும் முன் காக்கும் திட்டம் இருப்பது போன்று கடந்த 2000ம் ஆண்டில் கால்நடைகளுக்கும் வரும் முன் காப்போம் திட்டத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் கொண்டு வந்தார். தற்போது தமிழகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்களை நடத்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் முதலாவது சிறப்பு முகாம் தென்காசி மாவட்டம் குறும்பலாப்பேரியில் துவங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிதுள்ளார்.
மேலும், " நாட்டுக்கோழி தட்டுபாட்டை போக்குகின்ற வகையில் நாட்டுக் கோழி பெருக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கிராம மக்கள் அதிகளவு பயன் அடைந்துள்ளனர்
இதனைத் தொடர்ந்து விழாவில் நடத்தப்பட்ட கால்நடை கண்காட்சியில் இடம்பெற்ற விவசாயிகளுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார்.
இந்த விழாவில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், யூனியன் சேர்மன்கள் காவேரி, திவ்யா, ஷேக் அப்துல்லா மற்றும் கால்நடை மருத்துவர்கள் குழுவின்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க || 100 அடி ஆழத்திற்கு திடீரென உள் வாங்கிய நிலம்...அச்சத்தில் மக்கள்!