தாம்பரத்தில், வருவாய் கோட்டாட்சியரின் உதவியாளர், பட்டா கேட்டு விண்ணப்பித்த நபரிடம், ஏற்கனவே 20000 லஞ்சம் வாங்கிய நிலையில், மீண்டும் லஞ்சம் கேட்ததால், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்ததன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், ஏற்கனவே ஆர்.டி.ஓ.-வின் உதவியாளர் ராஜாவிடம் 20 ஆயிரம் கொடுத்திருந்தாக தெரிகிறது. இந்நிலையில், மீண்டும் 20 ஆயிரம் ரூபாய் கேட்டபோது, ரவிச்சந்திரன் ஆத்திரமடைந்து, இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில் ரவிசந்திரன் புகார் அளித்தார்.
அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைந்திருந்த போது, லஞ்ச பணம் ரூபாய் இருபதாயிரத்தை ரவிச்சந்திரன் ராஜாவிடம் கொடுக்கும்போது, ரகசியமாக கண்காணித்து போலீசார் ஆர்டிஓ-வின் உதவியாளர் ராஜாவை கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். பின்னர், அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.