விளையாட்டு

டென்னில் உலகின் ஜாம்பவான் ரஃபேல் நடால் ஓய்வை அறிவித்தார்

ஸ்பேனிஸ் வீரரான ரஃபேல் நடால் டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னனாக இருந்து வருகிறார். 22 முறை முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று ரஃபேல் நடால் சாதனை படைத்தவர்.

Jeeva Bharathi

களிமண்ணில் நடத்தப்படும் பிரன்ச் ஒபன் டென்னிஸ் தொடரில் 14 முறை சாம்பியன் பட்டங்களை வென்றதால் அவரை ரசிகர்கள் "கிங் ஆஃப் கிளே" என்று அழைத்து வருகின்றனர். உலகின் முன்னணி டென்னிஸ் வீரராக உள்ள த ரஃபேல் நடால், ஒலிம்பிக்கில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளிலும் பதக்கங்களை வென்றுள்ளார்.

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்த பிறகு ரபேல் நடால் சமீக காலமாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், தனது எக்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக விளையாடுவதில் தனக்கு சில சிரமங்கள் இருந்ததால் தற்போது ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக ரபேல் நடால் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் நடைபெறும் டேவிஸ் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள நடால், ரசிகர்கள் தனக்கு அளித்த அன்பும், ஆதரவும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்று தெரிவித்துள்ளார்.