விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி.. இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய தடகள வீரர்கள்!!

அமெரிக்காவின் ஒரேகான் நகரில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு, மூன்று இந்திய தடகள வீரர்கள் முன்னேறி உள்ளனர்.

Suaif Arsath

ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா:

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், குரூப் ஏ பிரிவில் ஈட்டி எரிதல்  சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா, 88 புள்ளி 39 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எரிந்தார். இதன் மூலம் ஈட்டி எரிதல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ள நிலையில், அவர் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

 ஈட்டி எறிதல் போட்டி ரோஹித் யாதவ்:

இவரைத் தொடர்ந்து ஈட்டி எறிதல் குரூப் பி பிரிவில் கலந்து கொண்ட ரோஹித் யாதவ் 77 புள்ளி 32  மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டிரிபிள் ஜம்ப் பிரிவு - எல்தோஸ் பால்:

மற்றொரு இந்திய தடகள வீரர் எல்தோஸ் பால் டிரிபிள் ஜம்ப் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். டிரிபிள் ஜம்ப் தகுதிச் சுற்றில் எல்தோஸ் பால் 16 புள்ளி 34 மீட்டர் தூரம் தாண்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் இறுதிப் போட்டிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.