விளையாட்டு

அமைச்சா் உதயநிதியிடம் ரூ.25 லட்சம் வழங்கிய கால்ஸ் குழும தலைவர்!

Tamil Selvi Selvakumar

அமைச்சா் உதயநிதியை சந்தித்து தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.25 லட்சம் வரைவோலை வழங்கியுள்ளார் கால்ஸ் குழும தலைவர்.

சென்னை பசுமைவழிச் சாலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கால்ஸ் குழுமத்தின் தலைவர் வாசுதேவன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு 25 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

மேலும், அவர் தெரிவிக்கையில் முதலமைச்சரின் பொறுப்பான ஆட்சியின் கீழும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சிறப்பான தலைமையின் கீழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். விளையாட்டு மேம்பாட்டு துறையில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டை உலக அரங்கில் தலை நிமிரச்செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு கால்ஸ் குழுமம் பங்காற்றக் கூடிய வகையில் 25 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் இந்த நேர்மையான முயற்சியில் கால்ஸ் குழுமம் பங்காற்றி இருப்பது பெருமை அளிப்பதாக கால்ஸ் குழுமத்தின் தலைவர் வாசுதேவன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மாலைமுரசு தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி சிவயோஹன், தலைமை செய்தி ஆசிரியர் அரவிந்த் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.