விளையாட்டு

மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே...! இன்று உடல் நல்லடக்கம்...!

Malaimurasu Seithigal TV

பிரேசிலின் மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 3 முறை வெற்றி கண்ட வீரருமான பீலே உடல்நலக்குறைவால் காலமானார். 82 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல், 29 ஆம் தேதி காலமானார். இவரது மறைவு கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பீலேவின் மறைவுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ, எம்பாபே தொடங்கி முன்னணி கால்பந்து பிரபலங்களும், பல்வேறு துறைகளை சேர்ந்த சர்வதேச பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 

பிரேசிலின் சாவ் பாலோ மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரண்ட மக்கல் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து இன்று, அவரது உடல் நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

மேலும் பீலேவின் நினைவாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் கால்பந்து மைதானங்களில் ஒன்றிற்கு பீலேவின் பெயரை வைக்குமாறு உலக நாடுகளை ஃபிஃபா கேட்கவுள்ளதாக விளியாட்டு நிர்வாகக் குழுவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

-- சுஜிதா ஜோதி