விளையாட்டு

ஷேன் வார்னே மரணத்தில் திடீர் திருப்பம்.. 3 நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தாய்லாந்து போலீசார் பரபரப்பு தகவல்!!

ஷேன் வார்னே மரணத்தில் அவருடன் இருந்த 3 நண்பர்களின் மீது சந்தேகம் இருப்பதாக தாய்லாந்து போலீசார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suaif Arsath

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்கும் ஷேன் வார்னே நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இயற்கை மரணம் என்று சொன்னாலும், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

ஷேன் வார்னே அவரது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து தாய்லாந்திற்கு சுற்றுலா போன்று சென்றுள்ளனர். அங்கு ஒரு விடுதியில் அவர்கள் தங்கியுள்ளனர். இரவு உணவிற்கு ஷேன் வார்னே வராததால், அவரது நண்பர்கள் அவரின் அறைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் எந்தவித உணர்ச்சிகளும் இல்லாமல் கிடந்துள்ளார்.

உடனே நண்பர்கள் முதலுதவி செய்து பார்ந்துள்ளனர். அது பலனளிக்கவில்லை என்பதால், ஆம்புலன்ஸை அழைத்ததாக போலீசாரிடம் அந்த 3 நண்பர்களும் தெரிவித்திருந்தனர். ஆம்புலன்ஸ் வந்த பிறகு 20 நிமிடங்கள் வரை அவருக்கு சிபிஆர் செய்த பார்த்த பிறகே அவர் உயிர் பிரிந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

ஷேன் வார்னே மாரடைப்பால் தான் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், தாய்லாந்து போலீசாருக்கு அவரின் மரணத்தில் சந்தேகம் தீரவில்லை. குறிப்பாக அவரின் மூன்று நண்பர்கள் கூறிய விளக்கங்கள் மீது நம்பிக்கை இல்லை என போலீசார் கூறி வருவது போல் தெரிகிறது..

இதனையடுத்து மருத்துவர்கள் அளித்த ரிபோர்டை கணக்கில் எடுக்காமல், அவரின் மூன்று நண்பர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்போவதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விசாரணையில் பல மர்மங்கள் வெளியாகலாம் என தெரிகிறது.