பாரீஸில் போதைப்பொருள் வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் டாம் கிரேக், போதைப் பொருள் வைத்திருந்ததாக பாரீஸ் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு போதைப் பொருளை விற்பனை செய்த நபரையும் அந்நாட்டு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவலை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி உறுதி செய்துள்ளது.