ஐபிஎல் தொடரில் 23வது லீக் ஆட்டத்தில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பூஞ்சாப் அணி அனல்பறக்கவிட்டது.
ஓப்பனிங் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் 52 ரன்களும், ஷிகர் தவான் 70 ரன்களும் அடித்தனர். 200 ரன்கள் வரும் என்ற எண்ணி கொண்டிருந்த நேரத்தில் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களால் 20 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி..
கடின இலக்குடன் ஆட்டத்தில் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடர் சரிவு தான் என்ற சொல்லவேண்டும்.. ஓப்பனிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். இதன் பிறகு மிடில் ஆர்டரில் டேவால்ட் பிரேவிஸ் 49, திலக் வர்மா 36, சூர்யகுமார் யாதவ் 43 ரன்கள் எடுத்தனர். இருந்தாலும் 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே மும்பை அணியால் எடுக்க முயன்றது. 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் மும்பை அணி தோல்வியை சந்தித்தது.
12 ரன்கள் வித்தியாசம் என்று சொன்னாலும், மும்பை அணியின் வெற்றி பறிபோனதற்கு காரணம் வெறும் இரண்டே நொடிகள் தான்.. மிடில் ஆர்டரில் களமிறங்கிய திலக் வர்மா 20 பந்துகளில் 36 ரன்கள் அடித்து மிகச்சிறப்பாக விளையாடி வந்தார். 13வது ஓவரில் ஒரு சம்பவம் நடந்தது.
13வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை.. சூர்யகுமார் அருகிலேயே அடித்தார். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் ரன் ஓடமா நின்று விட, எதிரே இருந்த திலக் வர்மா சிங்கிள் எடுக்க விரைந்தார். இதனால் பரிதாபமாக ரன்அவுட் ஆனார்.
இதேபோல் கெயீரன் பொல்லார்டு அதிரடியாக பேட்டை சுழற்றத் தொடங்கினார். 17வது ஓவரில் வைபவ் அரோரா வீசிய பந்தை அடித்துவிட்டு, ரன் ஓடினார். அப்போது பந்தை கவனிக்காமல் ஒரு நொடியில் 2வது ரன் எடுக்க முயன்ற அவர், தேவையில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் மும்பை அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் பறிபோனது. இதனால் மொத்த ஆட்டமும் தலைகீழாக மாறிப்போனது.. அந்த இரண்டு நொடிகள் மும்பை இந்தியின்ஸ் அணியின் முதல் வெற்றியை பறித்தது.