விளையாட்டு

“கிரிக்கெட் மைதானத்தில் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம்: மதத்தை திணிக்கும் முயற்சி” - கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

Malaimurasu Seithigal TV

நாடாளுமன்றம் தொடங்கி கிரிக்கெட் விளையாட்டு வரை, அனைத்திலும் மதத்தை திணிக்கும் முயற்சிகள் திட்டமிட்ட விதத்தில் நடைபெற்று வருகின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,..

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான விளையாட்டு நடைபெற்ற அரங்கத்தில் "ஜெய் ஸ்ரீராம்" என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. 

 அதை தொடர்ந்து, விளையாட்டு வீரர்களை சூழ்ந்து கொண்டு, "ஜெய் ஸ்ரீராம்" என முழக்கமிட்டனர். இவ்வாறு நடக்க அனுமதிப்பது விளையாட்டின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது. உணர்ச்சித் தூண்டலை செய்து சுயலாபம் அடைந்திடவே இதுபோன்ற நிகழ்வுகள் ஊக்கப் படுத்தப்படுகின்றன. 

 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை உலகமே கவனிக்கும்போது, இத்தகைய நிகழ்வு நடந்திருப்பது நாட்டின் மதிப்பை சரிக்கும் விதமானது, கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற செயல்களை ஒன்றிய அரசும், கிரிக்கெட் சங்க நிர்வாகமும் வேடிக்கை பார்ப்பதும், ஆதரித்துக் கொண்டிருப்பதும் கண்டனத்திற்குரியதாகும்”.

என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.