மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.
மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், நேற்று மூன்றாவது இருபது ஓவர் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக் காரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் 6 ரன்களிலும் முதல் போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து திலக் வர்மாவும் சூர்யகுமார் யாதவும் நிலைத்து விளையாடினர். சிறப்பாக விளையாடிய சூர்ய குமார் யாதவ், 44 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் திலக் வர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று 17 புள்ளி 5 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறச் செய்தனர். ஆட்ட முடிவில் திலக் வர்மா 49 ரன்களுடனும் ஹர்திக் பாண்டியா 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையும் படிக்க:பாரம்பரிய உடையில் ஹாக்கி அணி கேப்டன்கள்!