விளையாட்டு

என்னது 250 வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பா..?டென்னிஸ் வீரரின் குமறல்...

பிரெஞ்சு டென்னிஸ் வீரர் தனக்கு 250-வது முறையாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது மனகஷ்டத்தை இன்ஸ்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

உலகம் முழுவதும் கொரோனாவில் தொடங்கி டெல்டா, ஒமைக்ரான் என உருமாறிய வைரஸ்கள் வரை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

அதிலும் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ்களுக்கு கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பிரபலங்களும், வீரர், வீராங்கனைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக டென்னிஸ் நட்சத்திரங்கள் பலர் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் பிக்பாஷ் தொடர், ஆஷஸ் தொடர், ஜூனியர் உலக கோப்பை என பல்வேறு தொடர்கள்  பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், டென்னிஸ் நட்சத்திரங்களான ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர், ஆண்ட்ரே ரூப்லெவ், பெலிண்டா பென்சிக் மற்றும் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பிரெஞ்சு டென்னிஸ் வீரரான பெனாய்ட் பைரேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசை பட்டியலில் 46-வது இடத்தில் இருக்கும் பெனாய்டுக்கு கொரோனா தொற்று உறுதியானது இது முதல் முறை அல்ல. தனக்கு இது 250-வது முறையாக தொற்று பாதித்துள்ளதாக தன் ஆதங்கத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், என் பெயர் பெனாய்ட் பைரே, தொடர்ந்து 250-வது முறையாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. என்னால் இந்த கொரோனா நோயை இனி சமாளிக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு  சொகுசு விடுதிகளிலும் தனிமைப்படுத்தலிலே ஏன் வாழ்நாள் செல்கின்றது. இப்போது  நான் மனதளவில் நன்றாக உணரவில்லை என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.