தேசிய அளவிலான போட்டி
கோவை செட்டிபாளையம் கரி மோட்டார்ஸ் பந்தயத்திடலில் ஜேகே டயர் FMSCI-யின் 25வது சாம்பியன்ஷிப் போட்டி பரபரப்பாக நடந்தது. ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கப், எல் ஜி பி ஃபார்முலா போர், எல்.ஜி.பி நோவைஸ் கப் கேட்டகிரி, எண்டுரன்ஸ் கப் 60 மினிட் நான் ஸ்டாப் டிரைவிங், 250cc பைக்ஸ் வித் 2 டிரைவர் சேஞ்ச் உள்ளிட்ட பிரிவுகளுக்கு போட்டிகள் நடைபெற்றது.
பறந்து சென்ற வாகனங்கள்
இந்தியா முழுவதும் இருந்து கார் மற்றும் பைக் ரேசர்கள் இந்த தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 25-ஆம் ஆண்டு நடைபெறும் இந்த தேசிய அளவிலான போட்டியில் ஏராளமான வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற நிலையில் போட்டியின் போது அவர்களின் பர்ஃபார்மன்ஸ் அனல் பறக்க செய்தது. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பந்தய திடலை கடக்கும் பொழுது கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து சென்றன.
ரேசர்களின் வெறித்தனம்
அனல் பறந்த பந்தைய திடலில் ரேசர்களின் வெறித்தனமான ஓட்டம் பார்ப்போரை பரவசப்படுத்தின. பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பந்தைய நிலையில் வெற்றி மேடைக்கு வரவழைக்கப்பட்டு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தங்களது வாகனங்களில் இருந்து வெற்றியை கொண்டாடி வெளிப்படுத்திய விதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.