விளையாட்டு

டெல்லி VS குஜராத் : 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது யார்?

Tamil Selvi Selvakumar

16-வது ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணி வெற்றிவாகை சூடியுள்ளது. 

16-வது சீசன் ஐபிஎல் கிாிக்கெட் தொடாின் நேற்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணி எதிா்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

இந்நிலையில் ஐபில் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிா்கொள்கிறது. இதில் வெற்றிக்கனியை பறிக்கப்போவது யாா்? என இரு அணி ரசிகா்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.