Picasa
ஆன்மீகம்

கடல் நுரையால் செய்யப்பட்ட தீண்டா மேனி விநாயகர்...

இராஜராஜ சோழனுக்கு வெற்றி வாகை தந்த வெள்ளை விநாயகர்

Nanda Kumar (நந்த குமார்)

பிரியத்திற்குரிய நேயர்களே

அறிவியல் வளர்ச்சி அடையாத காலத்தில்  கட்டிடக் கலை வல்லூனர்களும், சிற்பிகளும் பிரமாண்டமான ஆலயங்களை உருவாக்கியது எப்படி?

ஆற்றல் மிகுந்த தெய்வச் சிலைகளை செதுக்கியது எவ்வாறு?

என்ற கேள்விகளுக்கு இதுவரை விடைகள் கிடைக்காமல் இருப்பது வியப்பைதான் தருகிறது.

கோவிலை கட்டிய கோமானும்,சிலைகளை வடித்த சிற்பிகளிடமிருந்தும் வந்த ஒரே விடை.....இதுதான்

ஒவ்வொரு சிற்பியும் அவனது படைப்பை இறுதி செய்யும் வரை தன்னிலை மறந்து இறை நிலையில் இருந்ததாக வரளாறுகள் தெரிவிக்கின்றன

சரி நேயர்களே…..மனிதர்களால் உருவாக்கபட்ட சிலைகளை தான்  அறிந்திருக்கிறோம். ஆனால் தேவர்களால் உருவாகப்பட்டு பூமியில் இந்திரனால் வழிபாடு செய்யப்பட்ட தெய்வீக சிலையை பற்றி தெரிந்து கொள்வோமா?

வழி வழியாக பல்லாண்டு காலம் அபிஷேகங்கள் செய்யப்படாமல் ஆராதனைகள் நடத்தப்படும் ஆற்றல் மிகுந்த தெய்வத்தை காண்போமா?

கடல் நுறையால் உருவாக்கப்பட்டு,இந்திரனால் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட  மூலக்கடவுளின் அற்புதங்களை அறிவோமா?

 நேயர்களே வாருங்கள் வணக்கினால் வற்றாத செல்வத்தை தரும் வெள்ளை விநாயகரை திருவலஞ்சுழியில் தரிசிபோம்

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோவில் தமிழகத்தில் கும்பகோணம் தாலுகாவில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவலஞ்சுழி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது . இக்கோவிலின் பிரதான மூலவர் சிவபெருமான், கபர்தீஸ்வரர் எனும் திருப்பெயரிலும், அம்பாள் பிருஹந்நாயகி என்ற திருப்பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

சிவ ஆலயம் என்றாலும்   இக்கோவிலில் இருக்கும் வெள்ளை விநாயகர் மிகவும் புகழ்பெற்றவராக விளங்குகிறார். புராணங்களால் புகழப்பட்ட இந்த விநாயர் பூலோகத்திற்கு வந்த அதிசயத்தை தெரிந்து கொள்வோம் ,

கடல்  நுரையால் உருவாக்கப்பட்ட விநாயகர்

.

கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே ஸ்வேத விநாயகர் என்ற வெள்ளைப் பிள்ளையார் ஆவார். இவரே இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார்.

தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையல் தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது.அதனால் துண்பகளுக்கு ஆளான தேவரகள் தங்கள் தவற்றை உணர்ந்தனர். அப்போது பொங்கி வந்த கடல்நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின் விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள்.

அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் அங்கு ஒரு அழகிய கோயிலையும் கட்டினான்.

இந்திரன் கட்டிய சுந்தர கோயில்

இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே  நடப்பதில்லை சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள்.மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார் அர்ச்சகர். அதனால் இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார்.

விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றது என்றும் கூறுவர். இப்பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது.

இச்சந்நிதியிலுள்ள கருங்கல் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் தலம் என்பதைவிட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

மகாவிஷ்ணு, மார்கழி மாத சஷ்டி திதியில் இத்தலத்தில் உள்ள வெள்ளை விநாயகரை நேரில் வந்து வழிபட்டதாகவும் புராணங்கள் இருக்கின்றன.

ராஜராஜ சோழன், போருக்குப் போகும் போதெல்லாம் தன்னுடைய இஷ்ட தெய்வங்களின் ஒன்றான வெள்ளை விநாயகரை வழிபட்டு, பின்னர்தான் போருக்குச் சென்று வெற்றி வாகை சூடிவந்ததாக இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.

இப்படித் தெய்வங்களாலும், தேவர்களாலும் வணக்கப்பட்ட இத் திருகோவிலின் அமைப்பு  

சிற்பகலையில் சூத்திரங்கள் நிறைந்ததாக கானப்படுகிறது..

திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேவேந்திரன் பூஜை, தேரோட்டம் நடைபெற்று. சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடையும்.