இப்படி ஒரு விஷயம் இங்கு நடக்கிறதா?
இந்து கோயிலில் இது சாத்தியமா?
இந்து தர்மம இதை ஏற்கிறதா?
இதற்கு இறைவனின் அனுமதி கிடைக்கிறதா?
இப்படி பல கேள்விகளுக்கு விடையைக்காண வாருங்கள் நேயர்களே
பிணத்தை கண்டால் ஆலயங்களை மூடிவிடுவதை கண்டிருக்கின்றோம். உடலை அடக்கம் செய்யும் வரை கோயிலின் வாசல் மூடி,பூஜைகள் அனைத்தும் நிறுத்தபட்டிருக்கும். இது தான் வழக்கம். ஆனால் உயிரற்ற உடலுக்கு இந்து கோயிலில் மரியாதை செய்யப்படும் பழக்கம் தமிழகத்தில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா………ஆன்மா முக்தி கிடைப்பதைத்தான் கேள்வி பட்டிருகிறோம் அழியும் உடலுக்கு முக்தி கிடைப்பது அரியது அல்லவா
உலகில் உள்ள இந்து ஆலயங்களில் எங்கும் நிகழாத அதிசயம் இந்த சிவ ஆலயத்தில் நடக்கிறது. பல அதிசயங்களை தாங்கி நிற்கும் இந்த கோயிலில் இறைவன் உயிருக்கும் உடலுக்கும் முக்தி தருகிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த சிவ ஆலயம் தமிழகத்தில் அமைந்து அருள் பாலிக்கிறது என்றால் பக்தர்களுக்கு அது பாக்கியம் தான்.
அந்த பாக்கியத்தை பெரும் கோயில் தான் கடல் அலைகள் தழுவி விளையாடும் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு காயாரோகணேஸ்வரர் கோயில்
இங்கு தான் பிணத்திற்கு சிவன் அணிந்த மாலையும் வஸ்திரமும் அணிவிக்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. இந்த ஆலயத்தின் சக்தியை, சிறப்புக்களை, சுவாரஸ்யமான தகவல்களை இனி காண்போம்
சப்த ரிஷிகளும் பூஜித்த இந்த சிவாலயத்தில் உள்ள லிங்கம் கோமேதத்தல் அழகாக காணப்படுவதால் விடகலிங்கர் என் அழைக்கப்படுகிறார்.
புண்டரீகர் எனும் முனிவருக்கு இந்த தலத்தில் சிவபெருமான் காட்சிக்கொடுத்ததோடு அவரை கட்டி அணைத்ததால் காயாரோகணேஸ்வரர் என்று சிவன் அழைக்கப்படுகிறார். முனிவரின் ஆன்மாவுக்கும், உடலுக்கும் முக்தி கிடைத்ததால் இத்தலத்தில் வழிபட்ட அனைவருக்கும் உடலும் ஆன்மாவுக்கும் முக்தி கிடைக்கும் என்பது வழிவழியாய் இருந்து வரும் நம்பிக்கை.
சனி தோஷம், ராகு தோஷம்,,நாக தோஷம் என அனைத்தையும் நீக்கும் சர்வ தோஷ ஸ்தலாமாக விளங்கும் இக்கோயிலில் தான் நாயன்மார்களில் ஒருவரான தங்கமீன் அதிபத்தர் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார்.
யார் அந்த தங்க மீன் அதிபத்தர்,அவருக்கு நடந்தது என்ன?
நாகப்பட்டினம் கடற்பகுதியில் உள்ள ஒரு மீனவ கிராமத்தின் வாழ்ந்த அவர் தினமும் கடலில் மீன் பிடிக்கும் போது கிடைக்கும் முதல் மீனை கடலில் வீசி சிவனுக்கு அர்ப்பணம் செய்துவிடுவதை வழக்கமாக கொண்டுருந்தார்.
இவரை சோதிக்க விரும்பிய சிவன் இவருக்கு .ஒரு நாள் ஒரு தங்க மீன் கிடைக்கும் படி செய்வார். அதைகண்டதும் சக மீனவர்கள் அதை கடலுக்குள் போட வேண்டாம் என்று கூறியும் பக்தி மேலிட அதையும் கடலுக்குள் வீசி விடுவார். வறுமையிலும் வற்றாத அவரது பக்தியைக்கண்டுமெச்சிய சிவன் அம்பிகையுடன் காட்சியளித்து முக்தி அளிப்பார். அதனால்அதிபத்தர் நாயன்மார்களில் ஒருவராக அந்தஸ்த்தை பெற்றார்.
சிவனால் முக்தி பெற்ற அதிபத்தருக்கு மரியாதை செய்யும் விதத்தில் இக்கோயிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால் பிணத்தை கோயிலில் முன் வைத்து சன்னதியை அடைக்காமல் சிவனுக்கு அணிவித்த மாலை, வஸ்திரங்களை அணிவித்து பிணத்திற்கு தீர்த்தம் அளிக்கும் நிகழ்வு இன்றளவும் நடக்கிறது. இந்த நிகழ்வு வேறு எங்கும் நடப்பதில்லை. அதனால் தான் இந்த சிவனை மனமுருக தரிசித்தால் ஆன்மாவோடு உடலும் முக்தி அடையும் என்பது நம்பிக்கை
இக்கோயிலில் அம்பிக்கை நீலகண்களுடன் நீலாயாதாட்சியாக விளங்கி அழுகுணி சித்தருக்கு முக்தி அளித்தார். அழுகுணி சித்தரும் இங்கு சன்னதிகொண்டுள்ளது குறிப்பிடதக்கது
இக்கோயிலில் முகப்பில் அமைந்துள்ள விநாயர் உடலில் பாம்பினை ஆபரணமாகச்சூடி,தலைக்கு மேல் மற்றோரு நாகம் குடை பிடித்தது போல் வேறு எங்கும் இல்லாதபடி காட்சி அளிக்கிறார். நாக தோஷத்தால் துண்பங்களை அடைபவர்கள் ராகு காலத்தில் இந்த நாகபரண விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்து தங்கள் பட்ட வேதனைகளில் இருந்து விடுபட்டுள்ளார்கள்.
இங்கு சிவனே காலபைரவராக காட்சியளிப்பாதால் இங்கு வேண்டிக்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இன்னும் ஏராளமான அதிசயங்களும், அருளும் வாரி வழங்கிடும் இந்த அற்புத கோயிலுக்கு ஒரு முறையாவது தரிசனம் செய்து அருள் பெறுவோம்