இந்திய-அமெரிக்கரான நீல் மோகன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூபின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.
யூடியூபின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சூசன் வோஜ்சிக்கிக்கு பதிலாக மோகன் புதிய தலைமை நிர்வாகியாக பதவியேற்கவுள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சூசன் வோஜ்சிக்கி இந்த பதவியில் இருந்து விலகவுள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை நிர்வாகத்திடம் அளித்துள்ளார். நீல் மோகன் சூசன் வோஜ்சிக்கியுடன் நீண்டகாலமாக உடன் பணிப்புரிந்துள்ளார்.
இதன் மூலம் உலகின் முன்னணி நிறுவனங்களைக் கையாளும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் நீல் மோகனும் இணைந்துள்ளார். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை போன்ற தலைமைகளுடன் நீல் மோகனும் இணைந்துள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: பேசுப்பொருளாகவே இருக்கும் பாலின சமத்துவம்.... விளையாட்டுத்துறையிலிருந்து மாற்றுவோம்!!!