உலகம்

குடியுரிமையை மீட்டெடுப்பாரா ராஜபக்சே?!!

Malaimurasu Seithigal TV

இலங்கையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் கோத்தபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளார்.

அமெரிக்க குடியுரிமை:

இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையில் புகலிடம் பெறத் தவறியதையடுத்து,  அமெரிக்காவில் அவரது குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளார். ஆனால், அந்த கோரிக்கையை அமெரிக்க அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை.  

குடியுரிமை துறப்பு:

2019 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  ஏனெனில் இலங்கை அரசியலமைப்பின் படி இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இங்கு தேர்தலில் போட்டியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. 

கடினமான செயலா?:

73 வயதான ராஜபக்சே, அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது இலங்கையை விட்டு வெளியேறி, எந்த நாட்டிலும் தங்க அனுமதி மறுக்கப்பட்டதால், 2022ல் தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் வைத்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

-நப்பசலையார்