உலகம்

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு இடம் கிடைக்குமா?!!

Malaimurasu Seithigal TV

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில்  நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

"நாங்கள் முன்பே இதை விரும்பினோம்.  இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியவை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என பைடன் அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம்:

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அமர்வில் தனது உரையில் பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தத்தின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ஜோ பைடன். இன்றைய சகாப்தத்தின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில், அமைப்பை மேலும் பிற நாடுகளும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தான் நம்புவதாகவும் பைடன் கூறியுள்ளார்.

பைடன் அறிக்கை:

வீட்டோ அதிகாரம் குறித்து பைடன் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா உட்பட பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்கள் அனைவரும் ஐ.நா சாசனத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் வீட்டோவைத் தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

சிறப்பு அல்லது தீவிர சூழ்நிலைகளில் மட்டுமே வீட்டோ செயல்படுத்தப்பட வேண்டும், இதனால் சபையின் நம்பகத்தன்மையும் விளைவும் பராமரிக்கப்படும் என்றும் பைடன் கூறியுள்ளார். பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா வலியுறுத்துவதற்கு இதுவே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.