உலகம்

ஆப்கானிஸ்தானின் மீது திடீர் தாக்குதல்...நடத்தியது யார்?!!!

Malaimurasu Seithigal TV

ஆப்கானிஸ்தானின் ஹோட்டலில் நடைபெற்ற தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 3 தாக்குதல்காரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.  குறைந்தபட்சம் ஹோட்டல் விருந்தினர்கள் 2 பேர் தாக்குதலில் காயமடைந்துள்ளனர். 

தீவிரவாத தாக்குதல்:

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற தாக்குதல் பல மணி நேரம் நீடித்தது.  அதன் பிறகு நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்றன.  தலிபான்களின் எதிரியான ஐஎஸ் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு தற்போது பொறுப்பேற்றுள்ளது.  தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக தலிபான்கள் கூறியுள்ள நிலையில், ஐஎஸ் தனது இரு போராளிகளே தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளது. 

அமெரிக்கா கண்டனம்:

காபூலில் நடைபெற்ற தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தலிபான்கள் சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  மேலும் "ஆப்கானிஸ்தான் மக்கள் மீது நீண்டகாலமாக நடத்தப்பட்ட வன்முறையை நாங்கள் கண்டிக்கிறோம்," என்று பிரைஸ் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்