ஜி-20 உச்சிமாநாட்டின் இறுதிநாளான இன்று சதுப்புநிலக் காடுகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, மரக்கன்றையும் நட்டு வைத்தார்.
இந்தோனேஷியாவின் பாலி நகரில் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பு குறித்த அமர்வுகள் நேற்று நடைபெற்ற நிலையில், டிஜிட்டல் மாற்றம் தொடர்பாக இன்றைய அமர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமன் ஹுதன் ராயா பகுதியில் நுரா ராய் சதுப்புநிலக்காடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
அப்போது அவரும் அமெரிக்க அதிபர் ஜோபைடனும் சந்தித்துக் கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பிரதமர் மோடி உற்சாகத்துடன் மரக்கன்றை நட்டு வைத்தார்.
இதைத்தொடர்ந்து பிரான்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரனுடன் மதிய உணவு நேரத்தில் சந்தித்து இருதரப்புப் பேச்சு வார்த்தையில் அவர் ஈடுபட்டார். இந்நிலையில், ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி உள்ளிட்ட 7 நாடுகளுடன் அவர் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.