ஷெட்லாண்ட் தீவுகளில் நடைபெற்ற “அப் ஹெல்லி ஆ” எனப்படும் தீ திருவிழாவின் போது முதன்முறையாக பெண்கள் மற்றும் சிறுமிகள் தீப்பந்தங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
142 ஆண்டுகள் பழமையான இந்த நிகழ்வு பாரம்பரியமாக ஷெட்லாண்ட் தீவுகளின் தலைநகரான லெர்விக் நகரில் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு வரை ஜோதி ஏற்றி நடைபெறும் போர்வீரர் அணிவகுப்பில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த முறை பெண்கள் மற்றும் சிறுமிகள் அனுமதிக்கப்பட்டது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: இந்தியாவிற்கு வருகைப் புரிந்த விருந்தினர்கள்....