உலகம்

துருக்கி நிலநடுக்கம்.... மூன்றாவது முறை.... உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!!!

Malaimurasu Seithigal TV

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

துருக்கியின் நூர்தாகி நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7 புள்ளி 9 ஆக பதிவாகி உள்ளது.  இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.  அதன் விளைவாக துருக்கி மற்றும் சிரியாவில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலறி ஓடிய மக்கள்:

இதனிடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கட்டிடங்கள் திடீரென சரிந்து விழுந்தாதல் மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

இடிபாடுகளில்:

அதனை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிய சிறுமியை அந்நாட்டு மீட்பு படையினர் மீட்கும் வீடியோ வெளியாகி உள்ளது. 

அதேபோல் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவரை மீட்பு படையினர் கிரேன் மூலம் மீட்டனர்.

மூன்றாவது முறையாக:

கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் 3 ஆவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  அது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து உதவிகளையும்..:

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி  துருக்கிக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.  அதனை தொடர்ந்து 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற நாய் படைகள் துருக்கி விரைந்துள்ளன.